Tuesday, January 31, 2012

அன்னதானம் என்பது என்ன? உணவா?உணர்வா?உயிரா?


தருமருக்கு நீண்டநாள் ஒரு கனவு ஒன்று உண்டு அது  தான்
ஒரு மிகப்பெரிய அன்னதானம் செய்ய வேண்டும் என்பதுதான் அது
இதுவரை இப்படியொரு அன்னதானம் எவரும் செய்திருக்க கூடாது
இனியும் எவரும் செய்யமுடியாதபடியொரு அன்னதானமாக அது
இருக்க வேண்டும் என எண்ணினார் அதற்கான ஏற்பாடுகளை செய்தார்
 
உலகில் உள்ள அனைத்து சமையல் கலைஞர்களும் வரவழைக்கப்பட்டனர்சாப்பிடவரும் மக்கள் எந்த வகை உணவு கேட்டாலும் உடன் தயாரித்து வழங்கஏற்பாடு செய்யப்பட்டது

அன்னதானமும் நடந்தது லட்சக்கனக்கான மக்கள்
வந்து உணவருந்தி சென்றனர் வந்தஅணைவரும் அன்னதான ஏற்பாட்டை
பார்த்து வியக்காதவர்களே இல்லை தருமர் எதிர்பார்த்தது போலவே
மக்களும்இதுவரை இப்படியொரு அன்னதானம் எவரும் செய்திருக்கவில்லைஇனியும் எவரும் செய்யமுடியாது என்றே பேசி சென்றனர் இதனைகேட்டபொருமைசாலியான தருமருக்கே சற்றே கர்வம் வந்துவிட்டது

உடன் ஒரு வினோதமான ஒரு காட்சியை தருமர் கண்டார்
ஒரு எலி தருமர் நடந்த பாதைகளில் எல்லாம் உருன்டு புரண்டது
அந்த எலியின் உடலின் ஒருபாதி தங்கமாக இருந்தது மறுபாதி
இயல்பான எலியின் உடலாகவே இருந்தது. தருமர் அந்த எலியை பார்த்து ஏன் இப்படி செய்கிறாய் எனக்கேட்டார் அதற்கு அந்த எலிஒரு கதையை கூறியது

இது ஒரு உண்மைக்கதை 50 ஆண்டுகளுக்கு முன்பு இதேஊரில் கடும் பஞ்சம் நிலவியது பஞ்சத்தினால் பல குடும்பங்கள் பட்டினியால் இறந்தனர்
 
அதில் ஒருகுடும்பம் உணவின்றி சாககிடந்தனர் இன்னும் ஒருநாள் இவர்கள் உணவருந்த வில்லை எனில் அக்குடும்பத்தினரும் சாக வேண்டியதுதான் அதில் ஒருவன் மற்றவர்களுக்கும் சேர்த்து உணவு தேடி தட்டுதடுமாறி சென்றான்
 
அன்று மாலை சிறிது கோதுமை கொண்டுவந்தான் அதை மாவரைத்து ஒரு ரொட்டி செய்தனர் அந்த ரொட்டியை சாப்பிட்டால் இன்னும் ஒருநாள் ஜீவித்திருக்கலாம்.அக்குடும்பத்தினர் அந்த ஒரு ரொட்டியை சாப்பிட அமர்ந்தனர் அப்போது வெளியே அய்யா தர்மம் செய்யுங்க என குரல் கேட்டது உடன் அவன் எழுந்துசென்று அந்த ரொட்டியை தர்மம் செய்துவிட்டான்

தர்மம் பெற்ற பிச்சைக்காரன் அந்த ரொட்டியை சாப்பிட்டு சென்றுவிட்டான்
சிறிதுநேரத்தில் அக்குடும்பத்தினர் இறந்து விழுந்தனர். அந்த பிச்சைக்காரன் சாப்பிட்ட ரொட்டித்துண்டில் கீழேசிந்தியவற்றை நான்(எலி) சாப்பிட்டேன்
அதனை சாப்பிட்டதும் என் உடலில் பாதி தங்கமாக மாறியது
உடன் வானத்திலிருந்து ஓர்அசரீரி கேட்டது

உலகில் இதுவரை செய்த தானத்திலேயே இதுவே சிறந்த அன்னதானம் என்பதால் அதில் சிந்தியதை நீ உண்டதால் உன் உடலில் பாதி தங்கமாக மாறியது

இனிவருங்காலத்தில் இதற்கு இணையான ஓர் அன்னதானம் எவரும் செய்தால் அவர் பாதம் பட்ட மண்ணில் உன் உடல் பட்டால் உன் மீதிஉடலும் தங்கமாக மாறும் என அசரீரீ கூறியது

நீங்கள் செய்த இந்த பிரமான்டமான அன்னதானத்தை கண்டு அதற்கு இணையாகஇருக்குமென்று உங்கள் பாதம்பட்ட இடத்தில் நான் விழுந்து புரண்டேன்ஆனால் என்மீதி உடல் தங்கமாக மாறவில்லை
என எலி கூறியதும் தருமருக்கு தர்மசங்கடமாகிபோனது

லட்சக்கணக்கானவர்கள் திருப்தியாக சாப்பிட்டும் ஒரே ஒருவனுக்கு ஒரே ஒரு ரொட்டியை தானமாக கொடுத்ததற்கு இணையாகவில்லை ஏன் தெரியுமா?

அவன் வெறும் ரொட்டியை தானமாக கொடுக்கவில்லை அதில் அவன் உயிர் கலந்திருந்தது

No comments:

Post a Comment