Monday, August 13, 2012

ராகு-கேது பரிகாரத் தலம் பூவரசங்குப்பம்

மனித வாழ்வில் யோகம், மகிழ்ச்சி, ஞானம், முக்தி ஆகியவற்றை நிர்ணயிக்கின்ற சக்தி ராகு-கேது என்கிற இரண்டு கிரகங்களுக்கும் உண்டு. இவை தோஷத்தை மட்டும் தராமல் யோகத்தை வழங்குவதிலும் நிகரற்றவை. நாகதோஷம் இருக்கும்போது, எவ்வளவு ஆற்றலும் முயற்சியும் இருந்தாலும் முன்னேறுவது கடினம் என்கிறது ஜோதிடம். திருமணத் தடையும் இதனாலேயே ஏற்படுகிறது. இந்த தோஷங்களிலிருந்து விடுபட காளஹஸ்திக்குச் சென்று சர்ப்ப தோஷ நிவர்த்தியும் பரிகாரமும் செய்கின்றனர்.

 அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம், பூவரசங்குப்பம் என்ற கிராமத்தில் உள்ள சிவலோகநாயகி சமேத நாகநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. இத்தலம் ராகு-கேது பரிகாரத் தலமாகத் திகழ்கிறது. இத்தலத்தை நடுநாட்டு திருநாகேஸ்வரம், நடுநாட்டு காளஹஸ்தி என்றும் போற்றுகிறார்கள். பல்லவ மன்னன் ஒருவன் சைவ-வைணவ ஆலயங்களை இடித்ததால், நரஹரி என்ற முனிவரின் சாபம் ஏற்பட்டது. சாப விமோசனம் வேண்டி அவன் முனிவரைத் தேடிப் போனபோது ஒரு பூவரசு மரத்தின் கீழ் தங்கினான். மரத்தினின்று கீழே விழுந்த ஒரு பூவரசு இலையில் லட்சுமி நரசிம்மர் ஆவிர்பவித்திருப்பதைக் கண்டு திகைத்தான். உடனே, நரசிம்மருக்கு அங்கேயே ஆலயம் எழுப்பினான். பூவரசு இலையில் நரசிம்மர் தோன்றியதால் இந்த தலத்திற்கு பூவரசங்குப்பம் என்கிற பெயர் ஏற்பட்டது.

இங்குள்ள பழமையான சிவாலயத்தில் நாகநாதேஸ்வரர், கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார். இறைவி, சிவலோக நாயகி. சிதிலமடைந்து கிடந்த இந்தப் பழமையான ஆலயத்தை பக்தர்கள் திருப்பணிகள் பல செய்து அழகுபடுத்தியிருக்கிறார்கள். நாகேஸ்வரரின் வலப்பக்கம் தனி சந்நதியில் தெற்கு நோக்கி அம்பாள் காட்சியளிக்கிறாள். வெளிப் பிராகாரத்தில் தனிச் சந்நதிகளில் ராகு-கேது, தம் தேவியருடன் எழுந்தருளியிருக்கின்றனர். இத்தலம் இங்கு தோன்றியதன் பின்னணியில் வேறொரு சம்பவமும் கூறப்படுகிறது. பல்லவ மன்னனான சிம்மவர்மன் பல இடங்களில் ஆலயங்களைக் கட்டும் பொருட்டு காடுகளையும் மலைகளையும் சீர் செய்தான். அப்போது அங்கு வசித்து வந்த நாகங்களைக் கொல்ல நேர்ந்தது. அதனால் அவனுக்கும் அவன் வம்சத்திற்கும் நாகதோஷம் ஏற்பட்டது. இங்குள்ள தட்சிண பினாகினி என்ற தென்பெண்ணை நதிக்கரையில் தவம் செய்து கொண்டிருந்த சிவஹரி என்ற முனிவரைச் சந்தித்து அவர் அறிவுரையைக் கேட்டான்.

அந்த முனிவர் பூவரசங்குப்பத்தின் ஒரு மூலையில் புற்று ஒன்றில் சுயம்புவாக உள்ள சிவலிங்கத்தை நாகமொன்று பூஜித்து வருகிறது என்றும் அங்கு சென்று நாகத்தை வழிபட்டு, சிவலிங்கத்தை எடுத்து ஆலயம் எழுப்பினால் நாகதோஷம் நீங்கும் என்றும் கூறினார். மன்னனும் நாகத்தை வழிபட்டான். அந்த கருநாகம் வெளியே தோன்றி, ‘‘ஈசனின் பெயரோடு தன் பெயரையும் இணைத்து நாகேஸ்வரர் என்று பெயர் சூட்டி ஆலயம் அமைத்து வழிபடு’’ என்றது. அதற்கு மன்னனும் சம்மதிக்க, அந்த நாகம் தன் குட்டிகளுடன் புற்றிலிருந்து வெளியேறியது. மன்னன் புற்றை அகற்றி சிவலிங்கத்தைக் கண்டெடுத்து பிரம்மபாகம், விஷ்ணுபாகம் ஆகியவற்றைச் செய்து கருங்கல் ஆலயம் அமைத்தான். ஈசனுக்கு நாகேஸ்வரர் என்று பெயரிட்டு குடமுழுக்குச் செய்தான். குடமுழுக்கு நாளன்று புற்றிலிருந்த நாகம் சிவலிங்கத் திருமேனியைச் சுற்றிக் கொண்டு காட்சி அளித்து, பக்தர்களை மெய் சிலிர்க்க வைத்தது. மேலும் மன்னனின் வேண்டு கோளின்படி பக்தர்களின் கண்களில் படாமல் இன்றும் நாகநாதரை அது பூஜித்து வருவதாகக் கூறப்படுகிறது. அந்த நாகத்தால் இதுவரை எந்தவித இடையூறும் ஆபத்தும் ஏற்பட்டதில்லையாம். இப்போதும் அரிதாக அந்த நாகம் பக்தர்களின் கண்களுக்குத் தோன்றி அருட்காட்சி அளிப்பதாக பக்தர்கள் பரவசத்துடன் கூறுகின்றனர். மேலும் நாகதோஷம், காலசர்ப்ப தோஷங்களையும் போக்கி இந்த ஈசன் அருள்பாலித்து வருகிறார்.

நாளடைவில் ஆலயம் பழுதாகி, மீண்டும் விஜயநகர ஆட்சிக் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டதாக செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. ஒரு காலத்தில் விநாயகர், நந்தீசர், சண்முகர், வள்ளி - தெய்வானை சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டு மீட்கப்பட்டனவாம். கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம் அனைத்தும் கருங்கற்கள் திருப்பணிகளே. அர்த்த மண்டபத்தில், கருவறை நுழைவாயிலின் இருபுறங்களிலும் செந்தூர விநாயகரும் தண்டபாணியும் காட்சி அளிக்கின்றனர். பால கணபதி, தட்சிணாமூர்த்தி, மேற்கு கோஷ்டத்தில் பெருமாள், வடக்கு கோஷ்டத்தில் பிரம்மா, விஷ்ணு துர்க்கை ஆகியோரும் உள்ளனர். இடையில் சண்டிகேஸ்வரர் சந்நதி உள்ளது. வடமேற்கே வள்ளி-தெய்வானை சமேத முருகன் கிழக்கு நோக்கி அருட்காட்சியளிக்கிறார். வேண்டிய வரங்களை தன் பக்தர்களுக்கு அருளும் பாவனையில், உடனே புறப்படத் தயாராகும் நிலையில் காட்சி தருகிறார். வடகிழக்கில் நவகிரக சந்நதி உள்ளது. பைரவர் மேற்கு பார்த்தும் தென்கிழக்கில் சூரியன், ராகு-கேதுவைப் பார்த்தபடி நாகதேவியும் அருள்பாலிக்கின்றனர்.

ராகு பகவான் தனி சந்நதியில் தன் தேவியர் சித்ரலேகா, சிம்ஹியுடன் கிழக்கு நோக்கி சந்நதி கொண்டுள்ளார். கேது பகவானும் இவர்களுக்குக் காவலாக எட்டு நாகங்களும் உள்ளன. நடுநாட்டு நாகேஸ்வரம், நடுநாட்டு காளஹஸ்தி என்றெல்லாம் போற்றப்படும் இத்தலத்தில் நாகேஸ்வரப் பெருமானுக்கு ஒவ்வொரு தமிழ் மாதம் கடைசி ஞாயிற்றுக் கிழமையன்று விசேஷ வழிபாடுகளும் ராகு-கேது கிரகங்களுக்கு சர்ப்ப சாந்தி ஹோமங்களும் பக்தர்கள் முன்னிலையில் நடைபெறுகின்றன. ஆலயத்தைப் பற்றிய இதர விவரங்களுக்கு 9442010834 மற்றும் 9486748013 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இத்தலம் விழுப்புரத்திலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது. 

Tuesday, May 8, 2012

நாகதோஷம் போக்கும் நடுநாட்டு காளஹஸ்தி என்கிற பூவரசங்குப்பம்.


மனித வாழ்வில் யோகம், மகிழ்ச்சி, ஞானம், முக்தி ஆகியவற்றை நிர்ணயிக்கின்ற சக்தி ராகு-கேது என்கிற இரண்டு கிரகங்களுக்கும் உண்டு. இவை தோஷத்தை மட்டும் தராமல் யோகத்தை வழங்குவதிலும் நிகரற்றவை. நாகதோஷம் இருக்கும்போது, எவ்வளவு ஆற்றலும் முயற்சியும் இருந்தாலும் முன்னேறுவது கடினம் என்கிறது ஜோதிடம். திருமணத் தடையும் இதனாலேயே ஏற்படுகிறது. இந்த தோஷங்களிலிருந்து விடுபட காளஹஸ்திக்குச் சென்று சர்ப்ப தோஷ நிவர்த்தியும் பரிகாரமும் செய்கின்றனர். 

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம், பூவரசங்குப்பம் என்ற கிராமத்தில் உள்ள சிவலோகநாயகி சமேத நாகநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. இத்தலம் ராகு-கேது பரிகாரத் தலமாகத் திகழ்கிறது. இத்தலத்தை நடுநாட்டு திருநாகேஸ்வரம், நடுநாட்டு காளஹஸ்தி என்றும் போற்றுகிறார்கள். பல்லவ மன்னன் ஒருவன் சைவ-வைணவ ஆலயங்களை இடித்ததால், நரஹரி என்ற முனிவரின் சாபம் ஏற்பட்டது. 

சாப விமோசனம் வேண்டி அவன் முனிவரைத் தேடிப் போனபோது ஒரு பூவரசு மரத்தின் கீழ் தங்கினான். மரத்தினின்று கீழே விழுந்த ஒரு பூவரசு இலையில் லட்சுமி நரசிம்மர் ஆவிர்பவித்திருப்பதைக் கண்டு திகைத்தான். உடனே, நரசிம்மருக்கு அங்கேயே ஆலயம் எழுப்பினான். பூவரசு இலையில் நரசிம்மர் தோன்றியதால் இந்த தலத்திற்கு பூவரசங்குப்பம் என்கிற பெயர் ஏற்பட்டது.

இங்குள்ள பழமையான சிவாலயத்தில் நாகநாதேஸ்வரர், கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார். இறைவி, சிவலோக நாயகி. சிதிலமடைந்து கிடந்த இந்தப் பழமையான ஆலயத்தை பக்தர்கள் திருப்பணிகள் பல செய்து அழகுபடுத்தியிருக்கிறார்கள். நாகேஸ்வரரின் வலப்பக்கம் தனி சந்நதியில் தெற்கு நோக்கி அம்பாள் காட்சியளிக்கிறாள். வெளிப் பிராகாரத்தில் தனிச் சந்நதிகளில் ராகு-கேது, தம் தேவியருடன் எழுந்தருளியிருக்கின்றனர். இத்தலம் இங்கு தோன்றியதன் பின்னணியில் வேறொரு சம்பவமும் கூறப்படுகிறது. 

பல்லவ மன்னனான சிம்மவர்மன் பல இடங்களில் ஆலயங்களைக் கட்டும் பொருட்டு காடுகளையும் மலைகளையும் சீர் செய்தான். அப்போது அங்கு வசித்து வந்த நாகங்களைக் கொல்ல நேர்ந்தது. அதனால் அவனுக்கும் அவன் வம்சத்திற்கும் நாகதோஷம் ஏற்பட்டது. இங்குள்ள தட்சிண பினாகினி என்ற தென்பெண்ணை நதிக்கரையில் தவம் செய்து கொண்டிருந்த சிவஹரி என்ற முனிவரைச் சந்தித்து அவர் அறிவுரையைக் கேட்டான்.

அந்த முனிவர் பூவரசங்குப்பத்தின் ஒரு மூலையில் புற்று ஒன்றில் சுயம்புவாக உள்ள சிவலிங்கத்தை நாகமொன்று பூஜித்து வருகிறது என்றும் அங்கு சென்று நாகத்தை வழிபட்டு, சிவலிங்கத்தை எடுத்து ஆலயம் எழுப்பினால் நாகதோஷம் நீங்கும் என்றும் கூறினார். மன்னனும் நாகத்தை வழிபட்டான். அந்த கருநாகம் வெளியே தோன்றி, ‘‘ஈசனின் பெயரோடு தன் பெயரையும் இணைத்து நாகேஸ்வரர் என்று பெயர் சூட்டி ஆலயம் அமைத்து வழிபடு’’ என்றது. அதற்கு மன்னனும் சம்மதிக்க, அந்த நாகம் தன் குட்டிகளுடன் புற்றிலிருந்து வெளியேறியது. மன்னன் புற்றை அகற்றி சிவலிங்கத்தைக் கண்டெடுத்து பிரம்மபாகம், விஷ்ணுபாகம் ஆகியவற்றைச் செய்து கருங்கல் ஆலயம் அமைத்தான். 

ஈசனுக்கு நாகேஸ்வரர் என்று பெயரிட்டு குடமுழுக்குச் செய்தான். குடமுழுக்கு நாளன்று புற்றிலிருந்த நாகம் சிவலிங்கத் திருமேனியைச் சுற்றிக் கொண்டு காட்சி அளித்து, பக்தர்களை மெய் சிலிர்க்க வைத்தது. மேலும் மன்னனின் வேண்டு கோளின்படி பக்தர்களின் கண்களில் படாமல் இன்றும் நாகநாதரை அது பூஜித்து வருவதாகக் கூறப்படுகிறது. 

அந்த நாகத்தால் இதுவரை எந்தவித இடையூறும் ஆபத்தும் ஏற்பட்டதில்லையாம். இப்போதும் அரிதாக அந்த நாகம் பக்தர்களின் கண்களுக்குத் தோன்றி அருட்காட்சி அளிப்பதாக பக்தர்கள் பரவசத்துடன் கூறுகின்றனர். மேலும் நாகதோஷம், காலசர்ப்ப தோஷங்களையும் போக்கி இந்த ஈசன் அருள்பாலித்து வருகிறார்.

நாளடைவில் ஆலயம் பழுதாகி, மீண்டும் விஜயநகர ஆட்சிக் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டதாக செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. ஒரு காலத்தில் விநாயகர், நந்தீசர், சண்முகர், வள்ளி - தெய்வானை சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டு மீட்கப்பட்டனவாம். கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம் அனைத்தும் கருங்கற்கள் திருப்பணிகளே. அர்த்த மண்டபத்தில், கருவறை நுழைவாயிலின் இருபுறங்களிலும் செந்தூர விநாயகரும் தண்டபாணியும் காட்சி அளிக்கின்றனர். 

 பால கணபதி, தட்சிணாமூர்த்தி, மேற்கு கோஷ்டத்தில் பெருமாள், வடக்கு கோஷ்டத்தில் பிரம்மா, விஷ்ணு துர்க்கை ஆகியோரும் உள்ளனர். இடையில் சண்டிகேஸ்வரர் சந்நதி உள்ளது. வடமேற்கே வள்ளி-தெய்வானை சமேத முருகன் கிழக்கு நோக்கி அருட்காட்சியளிக்கிறார். வேண்டிய வரங்களை தன் பக்தர்களுக்கு அருளும் பாவனையில், உடனே புறப்படத் தயாராகும் நிலையில் காட்சி தருகிறார். வடகிழக்கில் நவகிரக சந்நதி உள்ளது. பைரவர் மேற்கு பார்த்தும் தென்கிழக்கில் சூரியன், ராகு-கேதுவைப் பார்த்தபடி நாகதேவியும் அருள்பாலிக்கின்றனர்.

ராகு பகவான் தனி சந்நதியில் தன் தேவியர் சித்ரலேகா, சிம்ஹியுடன் கிழக்கு நோக்கி சந்நதி கொண்டுள்ளார். கேது பகவானும் இவர்களுக்குக் காவலாக எட்டு நாகங்களும் உள்ளன. நடுநாட்டு நாகேஸ்வரம், நடுநாட்டு காளஹஸ்தி என்றெல்லாம் போற்றப்படும் இத்தலத்தில் நாகேஸ்வரப் பெருமானுக்கு ஒவ்வொரு தமிழ் மாதம் கடைசி ஞாயிற்றுக் கிழமையன்று விசேஷ வழிபாடுகளும் ராகு-கேது கிரகங்களுக்கு சர்ப்ப சாந்தி ஹோமங்களும் பக்தர்கள் முன்னிலையில் நடைபெறுகின்றன. 

ஆலயத்தைப் பற்றிய இதர விவரங்களுக்கு 9442010834 மற்றும் 9486748013 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இத்தலம் (பூவரசங்குப்பம்) விழுப்புரத்திலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது. 

Saturday, April 28, 2012

பிழைகளுக்கெல்லாம் தலையாய பெரிய பிழை எது.

* உலகில் மக்கள் செய்யும் பிழைகளுக் கெல்லாம் தலையாய பெரிய பிழை அறிவு தரும் நல்ல நூல் களைக் கல்லாமையே ஆகும். நல்ல நூல்களைக் கற்கும் போது, அறிவு மேம்படும். அதனால் தான் இறை வனை கற்றவர் விழுங்கும் கற்பகக் கனி என்பர்.

* மனிதனை உயர்த்துவது பணமன்று, பதவியும் அன்று, குலமும் அன்று, பருமனும் அன்று, உயரமும் அன்று. அது எதுதான் என்றால் அறிவு மட்டுமே. வள்ளுவர் இதனையே அறிவுடையார் எல்லாம் உடையார்' என்று குறிப்பிடுவார்.

* மலை புரண்டுவரினும், கடல் கொந்தளித்துப் பொங்கி னாலும், வானம் இடிந்து தலை மீது விழுந்தாலும் தர்மம் காட்டிய நல் வழியில் சத்தியத்தை விடாது கொண்டி ருக்கும் செயலே வீரச் செயலாகும்.


* பொறுமை கடலினும் பெரிது என்பர். பொறுமை ஒருவனுக்கு புகழைத் தரவல்லதாகும். புண்ணியவான்களிடமே பொறுமை குடிகொண்டிருக்கும்.


உலகம் கூட அழிந்துவிடும். ஆனால், பொறுமை மிக்கவரின் புகழ் அழிவதில்லை.

* மறக்காமல் மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய கருத்துக்கள் இரண்டாகும். அவை அறவழியில் செலவழித்த பொருளும், பூஜைக்காக செலவழித்த நேரமும் ஆகும்.

-வாரியார்

Wednesday, April 18, 2012

நம்மிடமுள்ள கெட்ட பழக்கத்தை விடுவது எப்படி.

கெட்ட பழக்கங்கள் வருவது எளிது. அவற்றை எப்படி விடுவது என்று தெரியாமல் நாள்தோறும் சிலர் திண்டாடிக் கொண்டிருகின்றனர். 

அதற்கு ஞானி ஓருவர் கூறிய எளிய வழி ..
 
ஒருசமயம் பக்தன் ஒருவன், ஞானியிடம் சென்று தனக்கு ஏற்பட்ட சூதாடும் பழக்கத்தை எப்படி விடுவது என்று கேட்டான். 

ஞானி உடனே தன் பக்கத்தில் உள்ள ஒரு தூணைப் பிடித்துக் கொண்டு, தூண் என்னை விடமாட்டேன் என்கிறதே! என்றார். 

 பக்தன், சுவாமி! நீங்கள் தூணை விடவேண்டியதுதானே! ஏன் விடமாட்டேன் என்கிறீர்கள்? என்றான். 

இதுபோலத்தான் நீயும் கெட்ட பழக்கத்தைவிட வேண்டும். அது உன்னை பிடித்துக்கொண்டு இருக்கவில்லை. 

நீதான் அதைப் பிடித்துக் கொண்டு இருக்கிறாய் எனக் கூற, பக்தன் சூதாடும் பழக்கத்தை விட்டுவிட்டான். 

எனவே எந்த தீய பழக்கமும் நன்மை பிடிக்க வில்லை.நாம் தான் அவற்றை பிடித்துள்ளோம் என்பதை உணர வேண்டும்.

Tuesday, April 10, 2012

திருப்பதி ஏழு மலைகளின் பெயர்கள்.

1. வேங்கட மலை: ‘வேம்’ என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு ‘வேங்கட மலை’ என்று  பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.

2. சேஷ மலை: பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார். இது ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை’ என்று அழைக்கப்படுகிறது.

3. வேதமலை: வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன. எனவே இது ‘வேத மலை’ எனப்பட்டது.

4. கருட மலை: இங்கு சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார். அதனால் இது ‘கருட மலை’ எனப் பெயர் பெற்றது.

5. விருஷப மலை: விருஷபன் என்ற அசுரன், இங்கு சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றான். அவனது பெயரில் இது ‘விருஷப மலை’ எனப் பெயர் பெற்றது.

6. அஞ்சன மலை: ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை. தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள். அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை ‘அஞ்சன மலை’ எனப்படுகிறது.

7. ஆனந்த மலை: ஆதிசேஷன், வாயு பகவானுக்கிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார். இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். இதனால் வாயுவும் ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர். இதன் காரணமாக இது ‘ஆனந்த மலை’ என்று பெயர் பெற்றது.

 எத்தனை எத்தனை கோவிந்தன்கள்! :

திருப்பதி திருமலையில் த்ருவ ஸ்ரீநிவாசர், போக ஸ்ரீநிவாசர், கொலுவு ஸ்ரீநிவாசர், உக்ர ஸ்ரீநிவாசர், மலையப்பர் என ஐந்து ஸ்ரீநிவாசர்கள் வீற்றுள்ளனர். இவர்களை பஞ்சபேரர்கள் என்று அழைக்கின்றனர்.

1. த்ருவ ஸ்ரீநிவாச மூர்த்தி

இவர்தான் மூலவர். ஆனந்த நிலையத்தில் சுயம்புவாக எழுந்தவர். சாளக்ராமத்தால் ஆனவர். இவரை ஸ்தானக மூர்த்தி, த்ருவமூர்த்தி, த்ருவபேரம், கோவிந்தன், ஸ்ரீவாரி, பாலாஜி என்றெல்லாம் அழைப்பர். சுமார் பத்தடி உயரம் கொண்ட பரந்தாமன். இந்த மூல மூர்த்தியை ஏகாந்த சேவைக்குப் பிறகு பிரம்மா முதலான எல்லா தேவர்களும் வந்து வணங்குவதாக ஐதீகம்.

2. போக ஸ்ரீநிவாச மூர்த்தி


இவர், கருவறையில் மூல மூர்த்தியுடன் இருப்பவர். கௌதுக பேரர், மணவாளப் பெருமாள் என்றும் இவருக்குப் பெயர். கோயிலில் இருந்து எப்போதும் வெளியே வராத இவருக்கு தினமும் ஆகாச கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெறுகிறது. புதன்கிழமை தோறும் காலை இவருக்கு தங்கவாசல் முன்பு ஸஹஸ்ரகலசாபிஷேகம் நடைபெறுகிறது. அச்சமயம் மட்டும் இவரை தரிசிக்கலாம். எட்டு அங்குல உயரத்தில் வெள்ளியினாலான பெருமாள் இவர்.

3. கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தி


கொலுவு என்றால் ஆஸ்தானம் என்று பொருள். தினமும் கருவறையில் தோமாலை சேவை ஆனதும் ஸ்நபன மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் எழுந்தருளும் இவரிடம் அன்றைய பஞ்சாங்க விஷயங்கள், கோயில் வரவு&செலவு, நித்திய அன்னதான நன்கொடையாளர் விவரங்கள், உற்சவ விஷயங்கள் ஆகியவற்றை ஆலய பட்டர் அறிவிப்பார். இந்நிகழ்வில் ஆலய பட்டர்கள், ஆலய ஊழியர்கள் தவிர வேறு யாரும் கலந்து கொள்ள முடியாது.

4. உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி

இவருக்கு வேங்கடத்து உறைவார், ஸ்நபன பேரர் என்றும் பெயர்கள் உண்டு. இவரே பதினான்காம் நூற்றாண்டு வரை உற்சவமூர்த்தியாக இருந்தவர். இவர் மீது சூரிய ஒளி பட்டால் உக்ரமாகி விடுவார். ஒரு முறை அவ்வாறு ஏற்பட, பல கெடுதல்கள் நிகழ்ந்து விட்டன. எனவேதான் புதிதாக மலையப்பசுவாமியை எழுந்தருளச் செய்தனர். உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் கைசிக துவாதசி அன்று மட்டும் விடியற்காலை மூன்று மணி அளவில் எழுந்தருளி பக்தர்களுக்கு கருணை புரிகிறார்.

5. உற்சவ ஸ்ரீநிவாசர் எனும் மலையப்ப சுவாமி


இவருக்கு மலை குனிய நின்ற பெருமாள், உத்ஸவ பேரர், மலையப்பர் எனும் பெயர்களும் உண்டு. நெற்றியில் பதிக்கப்பட்ட திருச்சுட்டியில் கஸ்தூரி திலகம் திகழக் காட்சியளிப்பவர் மலையப்பர்.