Tuesday, January 31, 2012

அன்னதானம் என்பது என்ன? உணவா?உணர்வா?உயிரா?


தருமருக்கு நீண்டநாள் ஒரு கனவு ஒன்று உண்டு அது  தான்
ஒரு மிகப்பெரிய அன்னதானம் செய்ய வேண்டும் என்பதுதான் அது
இதுவரை இப்படியொரு அன்னதானம் எவரும் செய்திருக்க கூடாது
இனியும் எவரும் செய்யமுடியாதபடியொரு அன்னதானமாக அது
இருக்க வேண்டும் என எண்ணினார் அதற்கான ஏற்பாடுகளை செய்தார்
 
உலகில் உள்ள அனைத்து சமையல் கலைஞர்களும் வரவழைக்கப்பட்டனர்சாப்பிடவரும் மக்கள் எந்த வகை உணவு கேட்டாலும் உடன் தயாரித்து வழங்கஏற்பாடு செய்யப்பட்டது

அன்னதானமும் நடந்தது லட்சக்கனக்கான மக்கள்
வந்து உணவருந்தி சென்றனர் வந்தஅணைவரும் அன்னதான ஏற்பாட்டை
பார்த்து வியக்காதவர்களே இல்லை தருமர் எதிர்பார்த்தது போலவே
மக்களும்இதுவரை இப்படியொரு அன்னதானம் எவரும் செய்திருக்கவில்லைஇனியும் எவரும் செய்யமுடியாது என்றே பேசி சென்றனர் இதனைகேட்டபொருமைசாலியான தருமருக்கே சற்றே கர்வம் வந்துவிட்டது

உடன் ஒரு வினோதமான ஒரு காட்சியை தருமர் கண்டார்
ஒரு எலி தருமர் நடந்த பாதைகளில் எல்லாம் உருன்டு புரண்டது
அந்த எலியின் உடலின் ஒருபாதி தங்கமாக இருந்தது மறுபாதி
இயல்பான எலியின் உடலாகவே இருந்தது. தருமர் அந்த எலியை பார்த்து ஏன் இப்படி செய்கிறாய் எனக்கேட்டார் அதற்கு அந்த எலிஒரு கதையை கூறியது

இது ஒரு உண்மைக்கதை 50 ஆண்டுகளுக்கு முன்பு இதேஊரில் கடும் பஞ்சம் நிலவியது பஞ்சத்தினால் பல குடும்பங்கள் பட்டினியால் இறந்தனர்
 
அதில் ஒருகுடும்பம் உணவின்றி சாககிடந்தனர் இன்னும் ஒருநாள் இவர்கள் உணவருந்த வில்லை எனில் அக்குடும்பத்தினரும் சாக வேண்டியதுதான் அதில் ஒருவன் மற்றவர்களுக்கும் சேர்த்து உணவு தேடி தட்டுதடுமாறி சென்றான்
 
அன்று மாலை சிறிது கோதுமை கொண்டுவந்தான் அதை மாவரைத்து ஒரு ரொட்டி செய்தனர் அந்த ரொட்டியை சாப்பிட்டால் இன்னும் ஒருநாள் ஜீவித்திருக்கலாம்.அக்குடும்பத்தினர் அந்த ஒரு ரொட்டியை சாப்பிட அமர்ந்தனர் அப்போது வெளியே அய்யா தர்மம் செய்யுங்க என குரல் கேட்டது உடன் அவன் எழுந்துசென்று அந்த ரொட்டியை தர்மம் செய்துவிட்டான்

தர்மம் பெற்ற பிச்சைக்காரன் அந்த ரொட்டியை சாப்பிட்டு சென்றுவிட்டான்
சிறிதுநேரத்தில் அக்குடும்பத்தினர் இறந்து விழுந்தனர். அந்த பிச்சைக்காரன் சாப்பிட்ட ரொட்டித்துண்டில் கீழேசிந்தியவற்றை நான்(எலி) சாப்பிட்டேன்
அதனை சாப்பிட்டதும் என் உடலில் பாதி தங்கமாக மாறியது
உடன் வானத்திலிருந்து ஓர்அசரீரி கேட்டது

உலகில் இதுவரை செய்த தானத்திலேயே இதுவே சிறந்த அன்னதானம் என்பதால் அதில் சிந்தியதை நீ உண்டதால் உன் உடலில் பாதி தங்கமாக மாறியது

இனிவருங்காலத்தில் இதற்கு இணையான ஓர் அன்னதானம் எவரும் செய்தால் அவர் பாதம் பட்ட மண்ணில் உன் உடல் பட்டால் உன் மீதிஉடலும் தங்கமாக மாறும் என அசரீரீ கூறியது

நீங்கள் செய்த இந்த பிரமான்டமான அன்னதானத்தை கண்டு அதற்கு இணையாகஇருக்குமென்று உங்கள் பாதம்பட்ட இடத்தில் நான் விழுந்து புரண்டேன்ஆனால் என்மீதி உடல் தங்கமாக மாறவில்லை
என எலி கூறியதும் தருமருக்கு தர்மசங்கடமாகிபோனது

லட்சக்கணக்கானவர்கள் திருப்தியாக சாப்பிட்டும் ஒரே ஒருவனுக்கு ஒரே ஒரு ரொட்டியை தானமாக கொடுத்ததற்கு இணையாகவில்லை ஏன் தெரியுமா?

அவன் வெறும் ரொட்டியை தானமாக கொடுக்கவில்லை அதில் அவன் உயிர் கலந்திருந்தது

Saturday, January 14, 2012

பொங்கல் நல்வாழ்த்துக்கள்.


Friday, January 13, 2012

தை பிறந்தால் வழி பிறக்கும்.

தை மாதப் பிறப்பான (15.1.2012) அன்றைய தினத்தை, உத்தராயன புண்ய காலம் என்பார்கள். சூரியன், தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்வதால், அந்த நாளை 'மகர சங்கராந்தி’ என்றும் போற்றுவார்கள். 

இந்தப் பூவுலகம் சிறப்புற இயங்கத் தேவையான ஒளியையும், அதன் மூலம் சக்தியையும் அளிக்கும் ஸ்ரீசூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடுவதே தைத் திருநாளின் நோக்கம்! 

இந்த நாளை, பொங்கல் படையலிட்டு சூரிய பூஜை செய்வது மிகவும் விசேஷம்.

சூரியனை ஆராதித்துப் போற்றுகிற பொங்கல் திருநாள், இந்த வருடம் ஞாயிற்றுக் கிழமையன்று வருவது பெரும் பாக்கியம்.

ஓம் மித்ராய நம: ஓம் ரவயே நம:
ஓம் சூர்யாய நம: ஓம் பாநவே நம:
ஓம் ககாய நம: ஓம் பூஷ்னே நம:
ஓம் ஹிரண்யகர்பாய நம: ஓம் மரீசயே நம:
ஓம் ஆதித்யாய நம: ஓம் ஸவித்ரே நம:
ஓம் அர்காய நம:
ஓம் பாஸ்கராய நம

எனும் மந்திரத்தைச் சொல்லி, 'ஆதித்யஸ்ய நமஸ்காரான் யே குர்வந்தி திநே திநே:  ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷூ தாரித்ர்யம் நைவ ஜாயதே:’ என்கிற வசனப்படி, தினமும் காலையில் பன்னிரு நமஸ்காரங்கள் செய்பவர்களுக்கு இந்தப் பிறப்பு மட்டுமின்றி, இனி எடுக்கிற ஒவ்வொரு பிறப்பிலும் செல்வச் செழிப்பில் எந்தக் குறையும் ஏற்படாது என்றும், நல்ல தேக ஆரோக்கியத்துடன் வாழ்க்கை அமையும் என்றும் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றைக் கடைப்பிடித்த நம் முன்னோர்களை உதாரண புருஷர்களாகக் கொண்டு நாமும் வாழ்ந்தால், நம் வாழ்க்கை மட்டுமின்றி நம் சந்ததியினரது வாழ்க்கையும் சிறக்கும்!
'உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார்’ என்பார்கள். நமக்குத் தேவையான உணவுகளுக் காக, தன் வாழ்க்கையையே தியாகம் செய்யும் உழவர் பெருமக்களுக்கு இந்த நாளில், மனதார நன்றி செலுத்துவோம்!

Sunday, January 1, 2012

நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம்

                        அன்பு உள்ளங்களுக்கு இனிய புத்தாண்டு
                         நல் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்

ஸ்ரீ ரமண மகரிஷி.
மனிதன் தானே எல்லாவற்றையும் செய்வதாக எண்ணிக் கொள்கிறான். பிரச்னையே இங்குதான் தொடங்குகிறது. நம்மையும் மீறிய ஒரு சக்தியால் நாம் இயக்கப்படுகிறோம் . நாம் அச்சக்தியின் ஒரு கருவியே என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். 

அதைப் புரிந்து கொண்ட பின் பல துன்பங்களிலிருந்து மனம் விடுபட்டு விடும். அந்த எண்ணம் தோன்றாதவரைக்கும் நமக்கு நாமே துன்பங்களை வரவழைத்துக் கொள்கிறோம் என்பதே உண்மை. 

மரணத்திற்குப் பிறகு என்ன என்பதைப் பற்றி எண்ணி இப்போதே விடை தேட வேண்டாம். எதிர்காலத்தைப் பற்றி எதிர்காலமே கவனித்துக் கொள்ளும். எனவே, அந்தக்கவலையை விடுத்து நிகழ்காலத்தில் நிறைவாக வாழ முற்படுங்கள். 

ஒருவன் தன்னைப் பற்றி முதலில் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். தன்னைப் பற்றியே சரியாகவும், முறையாகவும் அறிந்து கொள்ள முடியாத ஒருவனால் உலகத்தைப் பற்றி அறிந்து கொள்வது முடியாத செயல். அப்படி அறிந்து கொண்டதாக ஒருவன் எண்ணினால், அது அஸ்திவாரம் இல்லாமலேயே சுவர் எழுப்பியது போன்றதாகும். 

உடுத்தும் உடையை மாற்றிக் கொள்வதும், வீட்டைத் துறப்பதும் மட்டும் சந்நியாசமன்று.

மனதில் உள்ள ஆசாபாசங்களையும், பந்தங்களையும் துறப்பதே உண்மையான சந்நியாசம்.