Wednesday, August 24, 2011

பொய்யை விட்டுவிடு. நீ காப்பாற்றப்படுவாய்

ஒரு நாத்திகன் மருந்துக்காக ஒரு மரத்தின் தளிர்களைப் பறிக்க கிளையின் நுனிப்பாகத்திற்கு வந்தான். அந்தக் கிளை மரணப் பள்ளத்தை நோக்கிக் குனிந்து கொண்டிருந்தது.

கிளையின் நுனிக்கு வந்ததும் அவன் தன் அபாய நிலையை உணர்ந்தான். ‘இப்போது கிளை முறிந்தால் நம் கதி அதோ கதி’ என்று நினைத்தான். 

அப்போது கிளை நிஜமாக முறிய ஆரம்பித்தது. 

அவனையும் அறியாமல் “அய்யோ கடவுளே! என்னைக் காப்பாற்றேன்” என்றான். 

கடவுள் வானத்தில் தோன்றினார். “நான் உன்னைக் காப்பாற்றுகிறேன். ஆனால் நான் சொன்னபடி நீ கேட்க வேண்டும்” என்று சொன்னார்.

“சரி. நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன். காப்பாற்று” என்றான் அவன்.

“முறியும் கிளையை விட்டுவிடு. பள்ளத்தில் குதி” என்றார் கடவுள்.

‘அய்யோ அங்கே குதித்தால் என் கதி என்னாவது?’ என்று கிளையை இறுகப் பற்றினான் அவன். 

கடைசியில் கிளை முறிந்தது. அவனும் பள்ளத்தில் விழுந்தான்.

பொய்யை விட்டுவிடு. நீ காப்பாற்றப்படுவாய். 

ஆனால் மனிதர்களுக்கு  நம்பிக்கை வருவதில்லை.

1 comment:

SURYAJEEVA said...

நீங்கள் போதிப்பது அத்வைதமா அல்லது த்வைதமா... இந்த இரண்டில் எது உண்மை... எது பொய்.. இரண்டுமே ஒன்று என்று கூறி பொய் சொல்லாதீர்கள்...

Post a Comment